Powered By Blogger

Monday, July 18, 2011

அந்த இயற்கையால் கூட உன்னை ஒன்றும் செய்ய முடியவில்லை !!


சினிமாவை இயங்க வைக்கும் எந்திரன்
155 திரைப்படங்கள்…
ரசிகர்களை கிறங்க வைக்கும் மந்திரன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!!
அன்று அர்ச்சனை கூடைகளோடும்
ஆரத்தி தட்டுகளோடும் திரையரங்கம் வந்தோம்-
தலைவா உன்னை தொழுவதற்கு.
இன்று கோவில்களுக்கு முன்னால் தவம் கிடக்கிறோம்
உனக்காக அழுவதற்கு.
உனக்காக துடிப்பதற்கு ஏழு கோடி இதயங்கள் உண்டு
நாங்கள் இருக்கிறோம் தலைவா உன்னில் ஒரு அங்கமாக
பிடரி சிலுப்பி எழுந்து வா மீண்டும் ஒரு சிங்கமாக !!!
- விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தலைவருக்கு சிறந்த நடிகருக்கான மக்கள் தேர்வு விருது வழங்குவதற்கு முன் தரப்பட்ட ஒரு முன்னுரை இது.
நாம் முன்பே குறிப்பிட்டது போல, இந்த 2011 எந்திரன் ஆண்டு… பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் சரி, விருது குவிப்பிலும் சரி… ரஜினியின் எந்திரன் (ரோபோ) ஆண்டு!
கடந்த 2010 அக்டோபரில் வெளியான எந்திரன் அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலேயே அதிக வசூல் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்றது. உலகம் முழுவதும் அதிக வசூல் குவித்த ஒரே இந்தியப் படமும் தலைவர் படம்தான்!
அதேபோல, விருதுக் குவிப்பிலும் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறது எந்திரன். இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படம், திரையிடப்பட்ட அத்தனை சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுக்களைக் குவித்து, விருதுகளை வென்றது.
சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் எந்திரனுக்கு 6 விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த வில்லன் மற்றும் மக்கள் விரும்பும் சிறந்த நடிகர் என இரண்டு விருதுகள் தலைவருக்கு அறிவிக்கப்பட்டன.
சிறந்த நடிகருக்கான விருதை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அறிவிக்க, அதைப் பெற்றுக் கொள்ள தனுஷ் அழைக்கப்பட்டார்.
மேடைக்கு வந்த அவர், தலைவர் தந்த வாழ்த்து மற்றும் நன்றிக் கடிதத்தை வாசித்த பின், “ஒரு ரஜினி ரசிகனாகவே இந்த விருதினை நான் பெற்றுக்கொள்ள வந்திருக்கிறேன். என்றென்றும் மக்கள் மனம் கவர்ந்த நடிகர் என்றால் அது ரஜினி சார்தான். அவருக்கான இந்த விருதினை வாங்க இரண்டு கைகள் போதாது. எனவே இங்குள்ள அனைத்து நடிகர் நடிகைகளும் வந்து விருதினைப் பெற்று சூப்பர் ஸ்டாருக்கு மரியாதை செய்ய வேண்டுகிறேன்,” என்று அறிவிக்க, சூர்யா, விக்ரம், ஷங்கர், பிரகாஷ்ராஜ், த்ரிஷா, ஸ்ரேயா என நட்சத்திரங்கள் மேடைக்கு அணிவகுத்தது அத்தனை அழகு!
அடுத்த இரண்டு வருடங்களில் ராணா வெளியான பிறகும், ரஜினி சார் இதே விருதை இந்த மேடையில் பெறுவார் என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பலத்த கரவொலிக்கிடையே.
விருது வழங்கிய பின் கோபி சொன்னது:
தலைவா
அந்த இயற்கையால் கூட உன்னை ஒன்றும்
செய்ய முடியவில்லை !!!
You are a Miracle !!!
பிடரி சிலுப்பி சிங்கம் போல் எழுந்து வா தலைவா!!!
…வந்தாச்சுல்ல!

No comments:

Post a Comment